April 21, 2018
தண்டோரா குழு
வேலைக்காரன் வெற்றிய தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராஜ் இயக்கத்தில் ‘சீம ராஜா’ படத்தில் நடித்து வருகிறார்.இதனையடுத்து இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், காமெடியனாக கருணாகரன் நடிக்கிறார். இந்நிலையில், முக்கிய வேடத்தில் யோகி பாபு ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு முன் இவர் மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.