April 21, 2018
tamilsamayam.com
ராஜஸ்தான் அணிக்கு எதிரான 17வது லீக் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 204 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.இதையடுத்து இன்று நடக்கும் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார்.
இதையடுத்து,முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாட்சன் ராஜஸ்தான் அணி பவுலர்களை சும்மா திணறடிக்க,சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.அவ்வப்போது,விக்கெட் சரிய அந்த அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் குவித்தது. இதையடுத்து,குறைவான ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 13.1 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்தது.இதே போன்றும்,கடந்த 2010ம் ஆண்டு 13.5 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.