April 23, 2018
தண்டோரா குழு
விஜய் சேதுபதி நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் வெளியான படம் பண்ணையாரும் பத்மினியும்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்,அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ளார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கே.புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார்.இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் இறைவி படத்தில் நடித்துள்ளார்.
மேலும்,படத்திற்கு யுவன் இசையமைக்க,ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தென்காசி,மலேசியா போன்ற இடங்களிலும் படமாக்கப்பட இருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.