August 31, 2018 awesomecuisine.com
தேவையான பொருட்கள்:
கேரட் – இரண்டு (தோல் சீவி துருவியது)
கோதுமை மாவு – கால் கிலோ
உப்பு – தேவைகேற்ப
தண்ணிர் – தேவையான அளவு
நெய் – இரண்டு டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய், கேரட் சேர்த்து நன்றாக கிளறி, பிறகு தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு, சப்பாத்தி கல்லை பயன்படுத்தி சப்பாத்தி திரட்டி தவாவை சூடு செய்து சப்பாத்தி போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டு எடுக்கவும்.ஆரோக்கியமான கேரட் சப்பாத்தி ரெடி.