April 24, 2018 findmytemple.com
சுவாமி: நீலிவனேஸ்வரர், நீல கண்டேஸ்வரர், வாழைவனநாதர், சுவேத கிரி.
அம்பாள்: விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகி.
மூர்த்தி: எமன்.
தலவிருட்சம்: ஞீலி மரம் (கல் வாழை).
தலச்சிறப்பு:
“ஆதிதிருவெள்ளரை அடுத்தது திருப்பைஞ்ஞீலி ஜோதி திருவானைக்காவல் சொல்லிக் கட்டியது திருவரங்கம்” என்னும் பழமையான வழக்காறு இத்தலத்தின் பெருமையை நன்கு உணர்த்துகிறது.திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட தர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம்.குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது.அதனால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. எமபயம் நீங்க பிரத்தியேகமாக “எமதீர்த்தத்தை தெளித்து இங்கு எழுந்தருளியுள்ள எமதர்மருக்கு அர்ச்சனை செய்தால் எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை”.
அருகிலுள்ள நகரம் : திருச்சி.
கோயில் முகவரி : அருள்மிகு நீலிவனேஸ்வரர் திருக்கோவில்,திருப்பைஞ்ஞீலி – மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.