April 25, 2018
தண்டோரா குழு
ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7-ம் தேதி மும்பையில் தொடங்கியது.இதில் சென்னை, டெல்லி,மும்பை,ஐதராபாத்,கொல்கத்தா,பஞ்சாப்,பெங்களூரு,ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர்.இதில்,மும்பை,டெல்லி அணிகள் இதுவரை விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.இதனால் இரு அணி ரசிகர்களும் விரக்தியில் உள்ளனர்.
இந்நிலையில்,கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்து 2 முறை கோப்பையை வென்ற காம்பீரை இம்முறை டெல்லி அணி வாங்கி,அந்த அணிக்கு கேப்டனாக நியமனம் செய்தது.தற்போது அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் கவுதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி 27-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.