April 25, 2018
தண்டோரா குழு
நவரச நாயகன் கார்த்திக்,அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார்.வரலெட்சுமி சரத்குமார்,இயக்குனர்கள் மகேந்திரன்,அகத்தியன்,சதீஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன.இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும்,சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார்.இதையடுத்து இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.