April 26, 2018
தண்டோரா குழு
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் தலைவா.இப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம் என்றே சொல்லலாம்.இந்நிலையில் ஏ.எல் விஜய் அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் தனது புது படங்கள் குறித்தும் ஏற்கனவே இயக்கிய படங்கள் குறித்தும் பேசியுள்ளார். அப்போது அவரிடம் தலைவா 2 எப்போது?என்று கேள்வி கேட்டுள்ளனர்.அதற்கு அவர்,”எல்லோரும் என்னிடம் கேட்கும் ஒரு கேள்வி இதுதான்.விஜய் அவர்களுக்கு தெரியும் எப்போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று. நான் கதையையும் ஏற்கெனவே தயார் செய்து வைத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.