April 27, 2018
kalakkalcinema.com
தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தை அடுத்து அஜித் யாருடன் கூட்டணி வைப்பார்.இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் யாராக இருக்கும்? என்பது ரசிகர்களின் மனதில் உலா வரும் மில்லியன் டாலர் கேள்வி. ஏன் பாலிவுட் தயாரிப்பாளரும் ஸ்ரீ தேவியின் கணவருமான போனி கபூர் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூட தகவல்கள் வைரலாகி இருந்தன.
ஆனால்,தற்போது வேறொரு புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.தல அஜித்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.ஆனால் உண்மை என்ன? என்பதை அதிகாரபூர்வ அறிவிப்பு வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.