April 27, 2018
தண்டோரா குழு
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இயக்கினார்.இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் எனக் கூறப்பட்டது.ஆனால்,படத்திற்கு எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்,தொடர்ந்து சிம்புவின் நடவடிக்கைகள் குறித்த சர்ச்சைகள் பலவும் கிளம்பியது.
இதற்கிடையில்,ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் அப்படம் 3டியில் உருவாக இருக்கிறதாம்.அதில், ஹீரோயின்களாக ‘அனேகன்’ அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி மற்றும் புதுமுக நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்களாம்.
இந்நிலையில்,”சிம்புவுடன் சில தவறான புரிதல்கள் இருந்தது தான்.ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.அவருக்கு ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன்.ஆனால்,அது AAA இரண்டாம் பாகமாக இருக்காது.வேறு ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை, சிம்புவிடமும் கதை சொல்லிவிட்டேன். இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.