April 28, 2018
tamilsamayam.com
‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களின் படப்பிடிப்பு நடந்த அதே ஸ்டூடியோவில் மீண்டும் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.
நடிகர் அஜீத்தின் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது தான் ரசிகர்களின் ஒரே கேள்வி.படப்பிடிப்பு துவங்கவுள்ள சமயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிபோனது.
இந்நிலையில் மே மாதம் 7ம் தேதி ஐதராபாத்தில் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது.இதற்காக ராமோஜிராவ் ஸ்டுடியோவில் ஒரு கிராமம் போன்ற செட் போடப்பட்டுள்ளது.அங்கு 30 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.நயன்தாரா உட்பட மற்ற நடிகர்கள் பலரும் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதே ஸ்டுடியோவில் தான் அஜீத்தின் ‘வீரம்’,‘வேதாளம்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பும் நடந்தது குறிப்பிடத்தக்கது.