• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாய், மகளைக் கற்பழிப்பு வழக்கு 3 பேர் கைது, மேலும் பலருக்கு வலைவீச்சு

August 1, 2016 தண்டோரா குழு

சமீபகாலமாக பாலியல் குற்றச்சாட்டு என்றாலே அது உத்தரபிரதேசம் தான் என்ற நிலை உருவாகி வருகிறது. பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

காரில் சென்றுகொண்டிருந்த தாய் மற்றும் 13 வயது மகளைக் காரை வழிமறித்துக் கடத்திச்சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் உத்தரபிரதேச அரசு உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இந்நிலையில் தாய், மகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மெத்தன நடவடிக்கை காரணமாக 3 காவல்துறை அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நொய்டாவில் இருந்து ஷாஜஹான்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தனர். புலந்த்ஷகர் எனுமிடம் அருகே வந்தபோது, அவர்களது காரை ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது. பின்னர் காரில் இருந்த தாய், அவரது 13 வயது மகள் ஆகியோரை இழுத்துச் சென்று அந்தக் கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.

பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்லிடப் பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுள்ளது. அந்தக் கும்பலிடம் இருந்து தப்பித்த ஒருவர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேரைப் பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாகச் செயல்பட்ட புலந்த்ஷகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 உயர் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க