May 5, 2018
தண்டோரா குழு
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இப்படத்தை நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 9ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திறந்தவெளி மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்,நானா படேகர் உட்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும்,இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இசைகுழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.