May 7, 2018
tamilsamayam.com
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டது.
டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்த பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 152 ரன்களுக்குள் சுருட்டியது.பின்,153 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் அணி,தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
இதன் மூலம் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி.
ராஜஸ்தான் அணி கடைசியாக,8வது இடத்தில் உள்ளது.இப்போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் அணி வீரர் முஜீப் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.