May 7, 2018
தண்டோரா குழு
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் படத்தில் நடிகை ரேணுகாமேனனின் தங்கையாக நடித்தவர் அக்ஷயாரோ.தற்போது நடிகை அக்ஷயாரோ “யாளி” படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.
AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகன் தமன் ஜோடியாக அக்ஷயா நடித்துள்ளார்.மேலும் ஊர்வசி,மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பற்றி அக்ஷயாரோ கூறுகையில்,
“தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும்.தற்போது நானும் அந்த வரிசையில் இணைந்துளேன்.மும்பையின் பின்னணியில் நடக்கும் இப்படம் ரொமாண்டிக்,திரில்லர் படமாக இருக்கும்.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூன் மாதம் நடைபெறவுள்ளது என்றும்,ஜூலை மாதம் திரைக்கு வரும்”. என்று கூறினார்.