May 8, 2018
தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு கடந்த ஜூன் மாதம் ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது.இதில்,ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்,இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூன் 14 முதல் 18 வரை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.இந்நிலையில்,ஆப்கானிஸ்தானுடன் மோதும் இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது.
அதன் விவரம் :
ரஹானே(கேப்டன்),ஷிகர் தவான்,முரளி விஜய்,ராகுல்,புஜாரா,கருண் நாயர்,சாஹா,அஸ்வின், ஜடேஜா,குல்திப் யாதவ்,உமேஷ் யாதவ்,சமி,ஹர்திக் பாண்டியா,இஷாந்த் சர்மா மற்றும் சர்துல் தக்கூர்.