May 9, 2018
tamilsamayam.com
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் இசை சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நானா படேகர்,சமுத்திரக்கனி,ஈஸ்வரி ராவ்,ஹூமா குரேஸி,அஞ்சலி படேல்,சுகன்யா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.சமீபத்தில் இப்படத்தின் ப்ரீவியூ வெளியாகியது.
இதைத் தொடர்ந்து தற்போது,இப்படத்தின் இசை வெளியிடப்பட்டுள்ளது.இன்று மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கயிருக்கிறது.அதற்கு முன்னதாக,தனுஷ் காலா படத்தின் இசையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். வெளியாகியுள்ள 9 பாடல்களும் ரசிகர்களுக்கு பிடிக்கு விதமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் இப்படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது.