May 9, 2018
தண்டோரா குழு
டெல்லி,ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக கொண்டு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி இருந்தது.இந்த நிலநடுக்க அதிர்வுகள் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,இந்தியா ஆகிய நாடுகளிலும் ஏற்பட்டன.
இந்தியாவில்,தலைநகர் டில்லி,ஜம்மு காஷ்மீர்,இமாச்சல பிரதேசம்,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.இதனால் மக்கள் வீடுகள்,அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.