May 11, 2018
tamilsamayam.com
சுழலில் சூறாவளியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் இளம் வீரர் ரசித் கான்.இவரின் வெற்றிக்கு அனில் கும்ளே,சையத் அஃப்ரிடி தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் இளம் ஆப்கானிஸ்தான் வீரர்களான ரசித் கான், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர்.19 வயதேயான ரசித் கான் மிக இளம் வயதில் 100 டி20 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஐதராபாத் அணி மிக வலுவான பவுலிங் அணியாக மாற இவரும் காரணமாக உள்ளார்.
சாதனைக்கு காரணம் :
என் பவுலிங் சாதனைக்கு லெக் ஸ்பின்னர்களான இந்தியாவின் அனில் கும்ளேவும்,பாகிஸ்தானின் சையத் அஃப்ரிடியும் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
இன்னும் அவர்களின் பவுலிங் வீடியோவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அதன் மூலம் துள்ளியமாகவும், ஸ்பின் ஆவதற்கும் சிறப்பான பயிற்ச்சியாக இருக்கிறது.
ஐதராபாத் அணி பவுலிங் பயிற்சியாளரான முரளிதரன் என்னிடம் கூறும் போது, “நீ சரியான வகையில் தற்போது பவுலிங் செய்துகொண்டிருக்கிறார்.எதையும் மாற்ற தேவையில்லை.இதையே முறையாக செய்தால் போதும்.” என தெரிவித்ததாக கூறியுள்ளார்.