May 12, 2018
தண்டோரா குழு
கோலிவுட்,பாலிவுட் கலக்கி வரும் நடிகர் தனுஷ் தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தை தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து தமிழ்ப்பதிப்பின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை தனுஷ் வெளியிட்டுள்ளார். தமிழில் இந்த படத்திற்கு ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்று தலைப்பு
வைக்கப்பட்டுள்ளது.இப்படம் மே 30ம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.