May 14, 2018
தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டத்தை இன்று நடத்தினர்.
இந்த போராட்டத்தின் போது ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும்,அங்கிருந்த பல விவசாயிகளை அதிகாரிகள் வெளியேற்றி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும் உழவர் சந்தையில் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனவும்,விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய விவசாயிகள், இல்லையெனில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிரந்தரமாக காய்கறிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.