May 17, 2018
findmytemple.com
சுவாமி : யதோக்தகாரிப்பெருமாள்.
அம்பாள் : ஸ்ரீ கோமாளவல்லி தாயார்.
தீர்த்தம் : பொய்கை புஷ்கரணி.
விமானம் : ஸ்ரீ வேதஸார விமானம்.
தலச்சிறப்பு : இத்திருக்கோயிலின் இராசகோபுரம் மேற்கு நோக்கியும்,மூலவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் மேற்கு நோக்கித் திருமுகம் கொண்டுள்ளார்.பொய்கை ஆழ்வார் அவதரித்த தலம்.கோமளவல்லித் தாயார் தனிச் சந்நதியில் எழுந்தருளிய அருள்புரிந்து கொண்டு உள்ளார்.ஆழ்வார்களில் ஒருவாரான ஆண்டாள் நாச்சியாருக்கு இத்திருக்கோயிலில் தனிச் சந்நிதியுள்ளது.(நாச்சியார் நின்ற திருக்கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் சிலையாக உள்ளார் சிற்பக் கலைக்கு ஒரு உதாரணமாக அவ்வளவு தத்ரூபமாக சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பார்க்க வேண்டிய ஒன்றாகும்)பொதுவாக திருமால் எழுந்தருளியுள்ள தலங்களில் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும்.ஆனால் இங்கு மட்டும் யதோக்தகாரிப்பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார் என்பது சிறப்பாகும்.