May 23, 2018
தண்டோரா குழு
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.டெஸ்ட்,ஒருநாள் போட்டி,டி20 என அனைத்து போட்டிகளிலும் தனது ஆட்டத்தை வெளிபடுத்தி தனி முத்திரை படைத்தார்.அதிரடிக்கு இன்னொரு பெயர் டிவில்லியர்ஸ் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு போட்டியுலும் தன் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
இவரது ஆட்டத்தை காணவே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.அவருக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தென்னாபிரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.இந்தியாவில் ஐபிஎல்.லில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.மைதானத்தில் அனைத்து பந்துகளை 360 டிகிரி கோணத்தில் அடித்து நொறுக்குவார்.
இவரது தலைமையில் 2015 உலக கோப்பையை தென்னாப்பிரிக்கா வெல்லும் என பெரிதும் எதிர்பாக்கப்பட்டது.ஆனால்,அரையிறுதியில் நியுசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.இந்த ஆண்டும் ஐபிஎல்.லில் பெங்களூரூ அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை டிவில்லியர்ஸ் வெளிப்படுத்தினார். எனினும் பெங்களூரு அணி வெளியேறியது.
இந்நிலையில்,14 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடிய ஏபி டிவில்லியர்ஸ் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.தனது 34 வது வயதில் ஓய்வு பெறுவதாக டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.