May 25, 2018
tamilsamayam.com
ஐபிஎல்.,தொடரின் போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தின் மொபைல் ஆப் விளம்பரத்தால்,ஃபைனல் போட்டி ஏற்கனவே பிக்ஸிங் செய்யப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்தியாவில் 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர்ந்து நடக்கிறது.இந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
மும்பையில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.நாளை கொல்கத்தாவில் நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெல்லும் அணி ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். இந்நிலையில் ஐபிஎல்.,போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்தின் மொபைல் ஆப் விளம்பரத்தால், ஃபைனல் போட்டி ஏற்கனவே பிக்ஸிங் செய்யப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
அந்த விளம்பரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்,மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களை காட்டி ஐபிஎல்., ஃபைனலை காண தவறாதீர்கள் என ஒளிபரப்பட்டுள்ளது.இதனால்,ஐபிஎல்., ஃபைனல் போட்டி,ஏற்கனவே பிக்ஸிங் செய்யப்பட்டுவிட்டதா? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.