May 26, 2018
தண்டோரா குழு
கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்றில்,ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
மும்பையில் நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணி வெற்றிப் பெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.இந்நிலையில் நேற்று நடந்த தகுதிச்சுற்றின் இரண்டாவது போட்டியில் ஹைதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.நாளை (27-ந்தேதி) நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் அணியுடன் மோதுகின்றன.