May 28, 2018
தண்டோரா குழு
பல காயங்களுக்கு ஆறுதலாக ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்பணம் செய்கிறோம் என சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் டுவீட் செய்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடர் 11வது சீசன் பைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹைதரபாத் அணியை வீழ்த்த்தில் 3 வது முறையாக கோப்பையை வென்றது. மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இறுதி போட்டியில் முதலில் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சென்னை அணியில் வாட்சன் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.
இந்ந வெற்றியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஐபிஎல்.லில் சென்னை அணிக்காக விளையாடி ஹர்பஜன் சிங் தொடர்ந்து தமிழிலேயே டுவீட் செய்து வந்தார்.
இந்நிலையில் கோப்பையை வென்ற பின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்,
பல காயங்களுக்கு ஆறுதலாக இந்த ஐபிஎல் கோப்பையை சென்னை மக்களுக்கு சமர்ப்பணம் செயகின்றோம். காரியம் கை கைக்கூடியது. உங்கள் பாசத்திற்கும்! நேசத்திற்கும்! தலைவணங்குகின்றேன்.தாய் போல் எமை சீராட்டிய தமிழ்நாடு வாழியவே.அனைத்து துன்பங்களையும் மறந்து எங்கள் தோளோடு தோள் நின்றமைக்கு #நன்றி எனக் கூறியுள்ளார்.