May 30, 2018
தண்டோரா குழு
அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றது. இதையடுத்து,ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடவுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் போட்டி,வரும் ஜூன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் விளையாடும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் நேற்று, இந்த டெஸ்ட்டில் விளையாட உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,அஷ்கர் தலைமையில் அந்த அணி களமிறங்க உள்ளது.இதில் ரஷித் கான்,முஜீப் உர் ரஹ்மான்,அமீர் ஹம்சா மற்றும் ஜாகிர் கான் ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய டெஸ்ட்டுக்கான ஆஃப்கானிஸ்தான் அணி விவரம்:
அஷ்கர் ஸ்டானிக்சய் (கேப்டன்), மொகமத் ஷஜாத் (வி.கீ),முஜீப் உர் ரஹ்மான்,ஷித் கான்,ஆமிர் ஹம்சா,நசீர் ஜமால்,ரஹ்மத் ஷா,ஹஷ்மதுல்லா ஷாஹீதி,அஃப்சர் ஸஸாய்,ஜாவேத் அகமதி, ஈசானுல்லா,மொகமது நபி,ரசயீத் ஷிர்ஸாத்,யாமின் அகமட்ஸாய்,வஃபாதார்,ஜாஹிர் கான்.