May 30, 2018
தண்டோரா குழு
ரஜத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கு ‘தேவ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடத்த மாதம் 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது.மேலும் இந்த படத்தில்,ரம்யா கிருஷ்ணன்,பிரகாஷ் ராஜ்,ஆர்.ஜே.விக்னேஷ்காந்த்,ரேணுகா,அம்ருதா,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.