May 31, 2018
tamilsamayam.com
ஐ.பி.எல் போட்டிகள் மிக கோலாகலமாக நடந்து முடிந்துள்ளன.ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடியும்,இறுதிப் போட்டியில் தோற்ற ஐதராபாத் அணிக்கு ரூ. 12.5 கோடியும்,3வது,4வது இடம் பிடித்த கொல்கத்தா,ராஜஸ்தான் அணிக்கு தலா ரூ.8.75 கோடியும் வழங்கப்பட்டது.
அதிக ரன்,விக்கெட்,சிறந்த கேட்ச்,சிறந்த அணி,வளர்ந்து வரும் சிறந்த வீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி அதற்கான பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.இதில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதில் 10 கோடி அணி நிவாகத்துக்கும்,10 கோடி வீரர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
வீரர்களுக்கு போட்டிக்கு முன் ஏலத்தில் எடுக்கும் போதே அவர்கள் பெரும் தொகை தெரியவந்து விடுகிறது.அதே சமயம் ஒவ்வொரு அணிக்கும் தலைமை பயிற்சியாளர்,பேட்டிங்,பவுலிங் பயிற்சியாளர்,ஆலோசகர் என நியமித்துள்ளனர்.
அதன் படி மிக அதிக தொகைக்கு பணி அமர்த்தப்பட்டவர் பட்டியலில் பெங்களூரு அணி பயிற்சியாளர் டேனியல் விட்டோரி உள்ளார்.
4 கோடி – டேனியல் விட்டோரி (பெங்களூரு தலைமை பயிற்சியாளர் )
4 கோடி – ஆசிஸ் நெஹரா (பெங்களூரு பவுலிங் பயிற்சியாளர் )
3.7 கோடி – ரிக்கி பாண்டிங் (டெல்லி தலைமை பயிற்சியாளர் )
3.2 கோடி – ஸ்டீபன் பிளமிங் (சென்னை தலைமை பயிற்சியாளர் )
3 கோடி – விரேந்திர சேவாக் (பஞ்சாப் அணி ஆலோசகர்)
2.7 கோடி – சேன் வார்னே (ராஜஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர் )
2.25 கோடி – ஜாக் காலிஸ் (கொல்கத்தா அணி தலைமை பயிற்சியாளர் )
2.25 கோடி – மஹிலா ஜெயவர்த்தனே ( மும்பை அணி தலைமை பயிற்சியாளர் )
2 கோடி – விவிஎஸ் லக்ஷ்மன் மற்றூம் டாம் மூடி (ஐதராபாத் பயிற்சியாளர்கள்)
1.5 கோடி – கேரி கிரிஸ்டன்(பெங்களூரு அணி பேட்டிங் பயிற்சியாளர் )
1.5 கோடி – லசித் மலிங்கா (மும்பை அணி பவுலிங் பயிற்சியாளர் )