• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாா்ஜிலிங் செல்கிறாா் நடிகா் ரஜினிகாந்த்

June 1, 2018 tamilsamyam.com

தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்பு செய்தியாளா்களிடம் பேசிய நடிகா் ரஜினிகாந்த் சா்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இன்று இரவு அவா் டார்ஜிலிங் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் தெரிதவித்த நடிகா் ரஜினிகாந்த் செய்தியாளா்களிடம் பேசினார்.போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் வெடித்தது என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் சமூக விரோதிகள் காவல்துறையினரை தாக்கிய பின்புதான் பிரச்சினை ஏற்பட்டது. சமூக விரோதிகள் தான் காவல் துறையினரை தாக்கினா், சமூக விரோதிகள் தான் ஆட்சியா் அலுவலகத்தை தாக்கினா்,அவா்கள் தான் குடியிருப்புகளுக்கு தீ வைத்தனா்.

சீருடையில் உள்ள காவல் துறையினரை யார் தாக்கினால் அதை வன்மையாக கண்டிப்பேன். போராட்டம்,போராட்டம் என்று சென்று கொண்டு இருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்று தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

சமூக விரோதிகள் என்று தெரிவித்த ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சி தலைவா்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனா்.மேலும் பத்திரிக்கையாளா் சந்திப்பில் பத்திரிகையாளா்களை ஒருமையில் பேசியது கூடுதல் சா்ச்சைக்கு வித்திட்டது.இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று இரவு டார்ஜிலிங் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க