June 4, 2018
tamilsamayam.com
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில்,கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது.இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் செரீனா,வீனஸ் ஜோடி ஸ்பெயினின் மார்டீனஸ்,ரஷ்யாவின் கிளபாக் ஜோடியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் துவக்கம் முதல் ஸ்பெயினின் மார்டீனஸ்,ரஷ்யாவின் கிளபாக் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது.இதன் முதல் செட்டை 6- என ஸ்பெயினின் மார்டீனஸ்,ரஷ்யாவின் கிளபாக் ஜோடி கைப்பற்றியது.இதற்கு டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை அமெரிக்காவின் செரீனா, வீனஸ் ஜோடி 7-6 என வென்று பதிலடி கொடுத்தது.
வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டை ஸ்பெயினின் மார்டீனஸ்,ரஷ்யாவின் கிளபாக் ஜோடி 6-0 என மிகச்சுலபமாக கைப்பற்றியது.முடிவில்,அமெரிக்காவின் செரீனா,வீனஸ் ஜோடி ஸ்பெயினின் மார்டீனஸ்,ரஷ்யாவின் கிளபாக் ஜோடியிடம் 4-6,7-6, 0-6 என்ற செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது.