June 4, 2018
தண்டோரா குழு
மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தினை அடுத்து நடிகை ஜோதிகா நடிக்கவிருக்கும் படம் காற்றின் மொழி’.இயக்குனர் ராதாமோகன் இயக்கும் இப்படத்தில் ஜோதிகாவுக்கு கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.இந்தியில் நேகா நடித்த வேடத்தில் லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.
இந்நிலையில்,இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜை போடப்பட்டு துவங்கியுள்ளது. இதில்,நடிகர் சிவக்குமார்,சூர்யா,ஜோதிகா,ராதாமோகன்,எம்.எஸ்.பாஸ்கர்,தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும்,நடிகர் சிவக்குமார் கிளாப்போர்டை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இப்படம் அக்டோபரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.