August 6, 2016
தண்டோரா குழு
கிருஷ்ணகிரியில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பாபு. 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், காமராஜ் நகரில் மருத்துவமனை வைத்துள்ளார். இவரிடம் குருபரபள்ளியை அடுத்த பண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகம்மாள்(25) என்பவர் காலில் உள்ள கட்டியை அகற்ற வேண்டும் எனக் கூறி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.இதையடுத்து பாபு, முருகம்மாளுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய ஊசி போட்டுள்ளார்.
இதையடுத்து மயக்கமுற்ற முருகம்மாள் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தாலுகா காவல்துறையினர் பாபு போலி மருத்துவர் என்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் பாபுவை கைது செய்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.