June 7, 2018
தண்டோரா குழு
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.தற்போது ஓய்வு பெற்றுள்ள ஐ.பி.எல்.லில் மும்பை இந்தியன் இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார்.சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வருகிறார்.தற்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி,இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 நாட்கள் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில்,இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார்.உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.எனினும் தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்று சச்சின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.