June 8, 2018
tamilsamayam.com
ஐபிஎல்.,தொடரில் அசத்தியது தான் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வாக முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடந்த ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் விளையாடினார்.அதில் 13 போட்டியில் 548 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டார்.பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பட்லர்.
இந்நிலையில்,இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதே காரணம் என பட்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பட்லர் கூறுகையில்,
“ஐபிஎல்., கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட விதம் எனக்கு அதிக தன்னம்பிக்கை அளித்தது.என்னைப்பொறூத்த வரையில் எந்த கலர் பந்தில் விளையாடுகிறோம் என்பதில் முக்கியமல்ல,எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம்.மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற ஐபிஎல் தான் முக்கிய காரணம்”.என்றார்.