August 8, 2016 தண்டோரா குழு
ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்று மகத்தான சாதனை படைத்தார் மைக்கேல் பெல்ப்ஸ். தனிநபராக இதுவரை 19 பதக்கங்கள் வென்றுள்ளார்.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், 2 வெண்கலம் என, மொத்தம் 8 பதக்கங்கள் வென்ற பெல்ப்ஸ், பின்னர் பீஜிங்கில் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று அனைத்துப் போட்டிகளிலும் வென்று 8 தங்கப்பதக்கங்களை வென்றார்.
இதையடுத்து ஒரு ஒலிம்பிக்கில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனை நிகழ்த்திய அமெரிக்காவின் மார்க் ஸ்பிட்சின் (1972, 7) சாதனையைத் தகர்த்தார்.ஏற்கனவே 16 பதக்கம் வென்றிருந்த இவர், லண்டன் ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வெல்லும் பட்சத்தில், அப்போதைய சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை லாரிசா லடினைனாவின் சாதனையை (18 பதக்கம்) முறியடிக்கத் திட்டமிட்டார்.
ஆனால், 400 மீ., தனிநபர் “மெட்லே’ பிரிவில் நான்காவது இடம் பிடித்து, முதல் பதக்க வாய்ப்பை இழந்தார். இதனால் இவரது திட்டம் நிறைவேறவில்லை.பின் 4×100 மீ., பிரீஸ்டைல் ரிலே போட்டியில், இவரது அமெரிக்க அணி வெள்ளிப் பதக்கம் வெல்ல, பெல்ப்சின் பதக்க எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் போட்டிகளில் வென்று சாதனை படைப்பார் என உறுதியாக நம்பப்பட்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 200 மீட்டர், தனிநபர் பட்டர்பிளை போட்டியில், இரண்டாவது இடம் பெற்று வெள்ளி கைப்பற்ற, பதக்க எண்ணிக்கை 18 ஆகா உயர்ந்து லாரிசாவின் சாதனையைச் சமன் செய்தார்.
அடுத்த சில மணி நேரங்களில் பெல்ப்சின் அமெரிக்க அணி, 4*200 மீ., பிரீஸ்டைல் ரிலே பிரிவு பைனலில் பங்கேற்று இதில், அனைத்து வீரர்களும் அசத்த, அமெரிக்க அணி தங்கம் வென்றது. இதையடுத்து பெல்ப்சின் பதக்க எண்ணிக்கையும் 19 ஆக உயர, ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்ற வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.அவர் இதுவரை 15 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகளில் 23 முறை பங்கேற்ற இந்தியா இதுவரை 21 பதக்கங்களே வென்றுள்ள நிலையில் 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள அமெரிக்க நீச்சல் வீரர் பெல்ப்ஸ் தனி நபராக 15 தங்கப்பதக்கம் உள்ளிட்ட 19 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தகுந்த சாதனையாகக் கருதப்படுகிறது.