June 9, 2018
தண்டோரா குழு
துப்பாக்கி,கத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
விஜய்யின் 62-வது படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் பழ.கருப்பையா,ராதாரவி இருவரும் இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர்.நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் 70 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில்,அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு அமெரிக்கா செல்கிறது.மேலும்,விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.