June 11, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் நடைபெற்ற கண்டங்களுக்கிடையே நடைபெறும் கால்பந்து தொடரான இண்டர்காண்டினெண்டல் தொடரில் இந்தியா, நியூசிலந்து, கென்யா, சீன- தைபே ஆகிய அணிகள் கலந்து கொண்டன.
இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் கென்யாவை வீழ்த்தி இண்டர்காண் டினெண்டல் கால்பந்து கோப்பையை இந்திய அணி வென்றது. இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி அபாரமாக விளையாடி 2 கோல்கள் அடித்தார்.
சுனில் சேத்ரி இறுதி போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் மொத்தம் 64 கோல்களை அடித்து அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் (64 கோல்கள்) சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.