கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக தொலைக்காட்சி நடிகரும் சினிமாவில் பல படங்களிலும் நடித்து வந்த சாய் பிரசாந்த் தற்கொலை செய்துகொண்டார்.
அதற்கு அவரது குடும்ப பிரச்சனையே காரணம் எனத் தெரியவந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை செகன்ந்ராபாத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த, ஜெமினி டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளினி நிரோஷா திடீரென தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து கூறிய காவல்துறையினர், நிரோஷாவின் காதலர் நள்ளிரவு 12 மணியளவில் போன் செய்து நிரோஷா என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்ததால் அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார் எனவே அவரைக் காப்பாற்றுங்கள் எனக் கூறினார்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு நாங்கள் செல்லும்போது அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பிரேதமாக மட்டுமே மீட்க முடிந்தது எனத் தெரிவித்தனர். அடுத்தடுத்து தொலைக்காட்சி ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்