June 12, 2018
tamilsamyam.com
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நேரலையில் பார்க்க பிரேசில் நாட்டு ரசிகர்களுக்கு வேலைக்கு வருதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஆர்வம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் சென்று ரசிக்க வேண்டும் என்பதே.உலகளவில் பலரும் அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்து ரஷ்யாவுக்கு பறக்க தயாராக உள்ளனர்.
அப்படி வசதியும்,வாய்ப்பும் இல்லாதவர்கள் போட்டியை நேரில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஷ்ய நேரப்படி மாலை 5.30, 8.30, 11.30 ஆகிய நேரங்களில் போட்டி நடைப்பெறுகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் ரஷ்ய நேரப்படி போட்டிகள் நள்ளிரவில் நடைப்பெற்றாலும் அதை கண்டே தீர வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியுள்ளது.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாடுகளில் நள்ளிரவாகவும், மேற்கு பகுதியில் உள்ள ஐரோப்பா நாடுகளில் மதியம் மற்றும், அமெரிக்க நாடுகளில் அதிகாலை நேரத்தில் போட்டி நடைப்பெறும் நேரமாக இருக்கும்.
இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் மிக தீவிர ரசிகர்களாக இருப்பவர்கள் பிரேசில் நாட்டவர். இவர்களுக்கு பிரேசில் அணி விளையாடும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஏதுவாக வேலை நேரம் மாற்றிக்கொள்ளலாம் என பிரேசில் அரசு அறிவித்துள்ளது.இதனால் பிரேசில் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.