• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெள்ளரிக்காய் தால்

June 12, 2018 tamil.boldsky.com

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் – 1

துவரம் பருப்பு – 100 கிராம்

வெங்காயம் – 1 (நறுக்கியது)

பூண்டு – 4 (நறுக்கியது)

வரமிளகாய் – 2

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

புளிச்சாறு – சிறிது

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி,3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு,துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம், பெருங்காயத் தூள்,வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் பூண்டு,வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,பின் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது வதக்கி,தண்ணீர் சிறிது ஊற்றி,மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும்,அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து,அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி,சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால் வெள்ளரிக்காய் தால் ரெடி!!!

மேலும் படிக்க