June 14, 2018
தண்டோரா குழு
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடி சதம் விளாசினார்.
இந்திய ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் அதிரடியாக விளையாடினர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 87 பந்துகளிலேயே சதத்தை எட்டினார்.இது அவருக்கு 7வது டெஸ்ட் சதம்.இதன் மூலம் ஆப்கன் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
மேலும்,டெஸ்ட் போட்டியில் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பே சதமடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.சர்வதேச அளவில் இந்தச் சாதனையை செய்துள்ள 6வது வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.