June 15, 2018
தண்டோரா குழு
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 262 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் முறையாக டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற ஆப்கானிஸ்தான் இந்திய அணியுடன் மோதியது. பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில்,இரண்டாம் நாளான இன்று களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு சுருண்டது.இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாந்த், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து ‘பாலோ ஆன்’ பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆப்கானிஸ்தான் அணி, 103 ரன்களுக்கு சுருண்டது.இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.