June 18, 2018
tamilsamayam.com
இயக்குனர் ராமின் பேரன்பு திரைப்படம் ஷாங்காயில் நடைபெறும் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
ஷாங்காயில் நடைபெறும் 47 வது சர்வதேச திரைப்பட விழாவான ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஎப்எப்ஆர்- International Film Festival Rotterdam) பேரன்பு திரைப்படம் திரையிடப்பட உள்ளது.வரும் 19ம் தேதி இரவு 8. 45 மணிக்குதி கிராண்ட் இண்டர்நேஷனல் சினிமாஸ் என்ற திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.
தமிழ் மற்றும் மலையாளம் என்று இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார், அஞ்சலி,சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.மம்மூட்டி இப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.தங்க மீன்கள் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடிக்கிறார்.
மேலும்,அஞ்சலி அமீர் என்ற திருநங்கை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மம்மூட்டி தான் இந்த கதாபாத்திரத்திற்கு அவரை பரிந்துரை செய்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.எ.சேகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார்.தரமணிக்கு பிறகு ராம் இயக்கத்தில் வெளியாகும் பேரன்பு திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.