June 18, 2018 findmytemple.com
சுவாமி: அருள்மிகு ஆஞ்சநேயர்.
தலச்சிறப்பு: நாமக்கலில் சுமார் 18 அடி உயரம் உள்ள சக்தி வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் திறந்த வெளியில் நின்று தொழுத கைகளுடனும்,இடுப்பில் கத்தியுடனும் இருக்கும் திருக்கோவில் ஆகும்.ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் ஆனது என்பது சிறப்பு.இந்நகருக்கு சுமார் 10 மைல் தொலைவில் அநேக மூலிகைகளும்,பல மரங்களும்,தானிய வகைகளும் கொண்ட “சதுரகிரி” என்னும் பெருமை வாய்ந்த “கொல்லி மலை” இருக்கிறது.இங்கு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல்,எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல்,துளசி மாலை சாத்துதல்,வடை மாலை சாத்துதல்,பூ மாலை சாத்துதல் ஆகியவை நேர்த்திக் கடனாக செலுத்தப்படுகின்றன.தவிர வெண்ணெய் காப்பு போன்ற சிறப்பு அபிஷேகங்களும் இங்கு செய்யப்படுவது வழக்கம்.
நடைதிறப்பு:காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை,மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள்: அனுமன் ஜெயந்தி.
அருகிலுள்ள நகரம்: நாமக்கல்.
கோயில் முகவரி: அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில்,நாமக்கல் – 637403.நாமக்கல் மாவட்டம்.