June 20, 2018
தண்டோரா குழு
தமிழ் படம் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே நடித்து வரும் படம் ‘தமிழ்ப்படம் 2.0’.
இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினை பெற்றது.சமூக வலைத்தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டது.இதுமட்டுமின்றி இப்படக்குழு சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சுற்றி, மற்ற நாடுகளின் அதிபர்கள் நிற்பது போன்று சிவா சுற்றி எல்லோரும் நிற்பது போன்ற புகைப்படத்தை உருவாக்கி வெளியிட்டார்கள்.
இந்நிலையில்,தற்போது படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தயாரிப்பாளர் படம் முழுவதையும் பார்த்திருக்கிறார். படம் பார்த்துவிட்டு தலை குணிந்து உட்கார்ந்து,தலையில் கை வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழ்ப்படம் 2.O படம் பார்த்த தயாரிப்பாளரின் மனநிலை என்றும் பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.