June 20, 2018
தண்டோரா குழு
ரஷ்யாவில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் இன்று விளையாடின.
இதில்,ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே அற்புதமாக கோலடித்துரொனால்டோ தனி ஆளாக அசத்தினார்.ஆனால், இந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் 57 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. இறுதியில் 1-0 என போர்ச்சுகல் வென்றது.
இதையடுத்து, மொராக்கோ அணியுடனான போட்டியில், 85 -வது கோலை அடித்துசர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.ரொனால்டோ 152 சர்வதேச போட்டிகளில் 85 கோல் அடித்து, அதிக கோல்கள் அடித்த ஐரோப்பிய வீரர் என்ற சாதனையை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.