June 21, 2018
தண்டோரா குழு
துப்பாக்கி, கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் இதனை டுவிட்டரில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாளை விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு 12 மணிக்கு சர்கார் படத்தின் இரண்டாவது போஸ்டரை சன் பிக்ஸர் நிறுவனம் வெளியிட போவதாக அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.