June 22, 2018
விளையாட்டு
உலககோப்பை கால்பந்து லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி குரோஷியாவிடம் வீழ்ந்தது.
உலககோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவுடனான லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா
மோதியது.நேற்று இரவு 11.30 மணிக்கு நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி குரோஷியாவுடன் பலப்பரிட்சை நடத்தியது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.இந்நிலையில் இரண்டாவது பாதியில் குரோஷியாவின் ரெபிச்,மாட்ரிச்,ராகிடிச் அடுத்தடுத்து கோல் அடித்தனர்.அர்ஜென்டினா தரப்பில் யாரும் கோல் அடிக்கவில்லை.இறுதியில் அர்ஜென்டினா அணி 0-3 கணக்கில் தோல்வியடைந்தது.
ஐஸ்லாந்துடன் நடைபெற்ற போட்டியில் கோல் அடிக்காமல் பெனால்ட்டி வாய்ப்புகளை வீணடித்த நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி இந்த ஆட்டத்தில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.