June 22, 2018
தண்டோரா குழு
பிக் பாஸ் முதல் சீசனில் பிரலமனவர்கள் நடிகை ஓவியா மற்றும் ஆரவ். பிக் பாஸ் வீட்டில் ஓவியா ஆரவை காதலித்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டு ஒரு நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டு சென்றார்.
இதன் பிறகு புதிய படங்களில் ஓவியா நடிக்க ஆரம்பித்தார்.அதைப்போல் ஆரவும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.இதனால் ஓவியா ஆரவை மறந்துவிட்டதாக பேசப்பட்டது.
இந்நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.